Thank you

​மருத்துவ குணம் நிறைந்த மூலிகை குளியல் பொடி செய்முறை

​அழகை விரும்பாத மனிதர்களே இருக்கமுடியது. அழகை பெறுவதற்கு ஆண்களும், பெண்களும் பலவிதமான இரசாயன கலவைகளை வாங்கி முகத்தில் பூசுகின்றனர். முகத்தையும், சருமத்தையும் பாதுகாக்க இயற்கை மூலிகைகள் நிறைத்து இருக்கின்றன. பலவித வாசனை சோப்புகளும், பவுடர்களும் நம் சருமத்தை பாதிக்கென்றன. இதனால் 30 வயதிலேயே முகச்சுருக்கம், தோல்சுருக்கம் வந்துவிடுகிறது. நமக்கே இப்படியென்றால் குழந்தைகளின் சருமம் மிக மென்மையானது. குழந்தைகளுக்கான சோப்புகளை வாங்கி பயன்படுத்தினாலும் அதிலும் கெமிக்கல் கலக்கப்பட்டு இருக்கிறது.​ இன்றைய காலகட்டத்தில் இரசாயனம்  கலக்காத சோப்புகளே கிடைக்காது. இந்த சூழலில் உடலை பளபளப்பாகவும், அழகாகவும், வியர்வை நாற்றம் இல்லாமல் நறுமணமாக வைத்திருக்க மூலிகை குளியல் பொடி செய்முறையை பார்ப்போம்.

தேவையான பொருள்கள்:

    

  • வெட்டி வேர் - 100 கிராம்

  • கஸ்தூரி மஞ்சள் - 100 கிராம் 

  • உலர்ந்த செம்பருத்தி பூ - 100 கிராம்

  • உலர்ந்த ரோஜா மொக்கு - 150 கிராம் 

  • உலர்ந்த ஆவாரம்பூ - 100 கிராம் 

  • பூலாங்கிழங்கு - 100 கிராம்

  • நன்னாரி வேர் - 100 கிராம் 

இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இவை அனைத்தையும் கலந்து மெஷின்யில் குடுத்து அரைத்து வைத்துகொண்டு சோப்புக்கு பதிலாக தினமும் குளியல் பொடியாக பயன்படுத்தலாம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் பயன்படுத்தகூடிய பொடி இது.குழந்தைகளின் மென்மையான சருமத்திற்கு ஏற்றதாகும். வெயில் காலத்தில் வேர்க்குரு,சரும தொல்லைகள் வராமல் தடுக்கப்படும். வியர்வை நாற்றம் வராது.இயற்கையாகவே சருமம் பொழிவுபெரும். முகத்தில் உள்ள கருமை,கரும்புள்ளிகள்,முகப்பரு மறையும்.இதை பயன்படுத்தும் போது எந்த சோப்பபையும் பயன்படுத்தாமல் இருந்தால் நல்ல பயன் தரும்

 

செய்முறை

             Watch It on youtube 

​இயற்கை ஹேர் டை-வாரம் இரு முறை பயன்படுத்தினால் போதும்

​முடி அடர்த்தியாக,கருமையாக வளர மூலிகை எண்ணெய்