Thank you

​கோடை காலத்தில் ஏற்படும் சளி,இருமல்,தலைவலி,வாய் புண்,வயிற்று புண் குணமாக கஷாயம்

​கோடையில் மிகப்பெரிய அச்சுறுத்தல் வெயிலும் வியர்வையும். வேலை சூழல் காரணமாக பகலில் அழைந்து கடைகளில் குளிர்பானங்களை வாங்கி குடித்தாலும்,வீட்டிற்கு வந்தவுடன் பிரிட்ஜ்-இல் இருந்து ஜில் தண்ணீரை எடுத்து குடித்தாலும் சிலருக்கு சளி பிடித்துவிடும். நீர்கோர்த்து  கொண்டு தலைவலி,தலைபாரம் ஏற்படும். சிலருக்கு வியர்வை தலையில் இறங்கி தலைவலி,சளி ஏற்படும்.இதற்கு கஷாயம் செய்முறை பார்ப்போம்

தேவையான பொருள்கள்

  • சித்தரத்தை பொடி 50கி

  • நன்னாரி பொடி 50கி

  • ​அதிமதுர பொடி 50கி

​இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து வைத்து கொண்டு ஒரு ஸ்பூன் அளவு எடுத்து 1 டம்ளர் தண்ணீரில் கலந்து ஒரு 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.பின் ஆற வைத்து வடிகட்டி காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் சளி,இருமல்,தலைவலி குணமாகும். உடல் உஷ்ணத்தை குறைக்கும். வாய்ப்புண், வயிற்று புண் குணமாகும். 10 வயது உட்பட்டவர்கள் அற ஸ்பூன் பொடியை கொதிக்க வைத்து குடிக்கலாம். 5 வயது உட்பட்டவர்கள் சுண்டைக்காய் அளவு பொடியை பயன்படுத்தலாம்.நன்றி,.வணக்கம்

Photo_1557208637650.png
​உடல் சூடு தனிய இயற்கை மருத்துவம்
Photo_1554979913210.png
​வெயிலினால் முகத்தில் ஏற்படும் கருமை , கழுத்தில் உள்ள கருமை நீங்க
2019-04-25_10-31-48.jpg
​ஒரு மாதத்தில் 5 கிலோ எடை குறைய இயற்கை சத்து உருண்டை
2019-04-23_19-28-45.jpg
​இந்த ஜூஸ் குடித்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் உப்பின் அளவு குறையும்,இரத்தம் சுத்தம் ஆகும்