Thank you

​ஒரு நாள் இந்த நீரை குடித்தால் போதும் குடல் சுத்தமாகிவிடும்,தீராத நாள்பட்ட மலச்சிக்கல் தீரும்

​                  நம் செரிமான மண்டலத்தின் ஒரு பகுதிதான் குடல். குடல் ஆரோகியமாக இருந்தால்தான் நம் உடல் ஆரோகியமாக இருக்கும். ஆனால் நம் உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறை மாற்றத்தினால் நம் குடலை நாமே கெடுத்துக்கொள்கிறோம்.இதனால் நச்சுக்கள் குடலில் இருந்து வெளியேறாமல் குடலை பாதித்து செரிமான மண்டலத்தையும் பாதிக்கிறது.நமக்கு அணைத்து பிரச்சனையும் வருவதற்கு முக்கிய காரணமே செரிமான மண்டலம் பாதிப்பு தான். மலச்சிக்கல் வருவதற்கு முக்கிய காரணமே குடலில் தேங்கி உள்ள நச்சுக்கள் மற்றும் கெட்ட கழிவுகள் தான்.  சித்தர்கள் நம் உடலில் நோய்யை இரண்டு வகையாக பிரித்திரிக்கிறார்கள் ஒன்று மலச்சிக்கல் மற்றொன்று செரிமான பிரச்சனை. அதனால் நம் குடலை அடிக்கடு சுத்தம் செய்வது மிகவும் நல்லது. இந்த பதிவில் குடலை சுத்தம் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

தேவையான பொருள்கள்

  • ஒரு கடுக்காய்

  • நிலாவரை இலை 5கிராம்

  • ​உப்பு கால் ஸ்பூன்

​                     கடுக்காய்​,நிலாவரை இலை  இரண்டும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.முதலில் ஒரு கடுக்காயை உடைத்து ஓட்டு பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும்(உள்ளே இருக்கும் கொட்டை பகுதியை பயன்படுத்தக்கூடாது).பின் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி இதனுடன் ஒரு கடுக்காயின் ஓட்டு பகுதியை சேர்த்து,இதனுடன் 5கிராம் நிலாவரை,கால் ஸ்பூன் உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து 7 நிமிடம் நன்றாக கொதிக்க வைத்து ஆர வைக்க வேண்டும்.

பின் வடிகட்டி இரவு உணவுக்கு பின் குடிக்க வேண்டும். ஒரே நாளில் குடலில் உள்ள நச்சுக்கள்,புழு,பூச்சிகள் வெளியேறும். நாள்பட்ட தீராத மலச்சிக்கல் பிரச்சனை ஒரே நாளில் தீரும்.இதை எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் குடித்து வரலாம்.தேவைக்கேற்ப குடித்துவிட்டு நிறுத்திக்கொள்ளலாம்.

                    நிலாவரை,கடுக்காய் இவை இரண்டிற்கும் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கிறது. முக்கியமாக உடலில் உள்ள கெட்ட நீர்,கொழுப்பு,நச்சுக்கள்,புழு,பூச்சிகள் அனைத்தையும் வெளியேற்றும்.சித்தர்கள் கடுக்காயை 'பெற்ற தாயை விட கடுக்காய் ஒரு படி மேலானது' என்று கூறியிருக்கிறார். அதாவது பெற்ற தாய் கூட நாம் ஆசைப்பட்டு நச்சுக்கள் நிறைந்த (பிச்சா,பர்கர்) போன்ற உணவுகளை வாங்கி கொடுத்துவிடுவார்கள், இதனால் உண்டாகும் கெட்ட கழிவுகளை இந்த கடுக்காய் அகற்றிவிடும்.15 வயதுக்கு உள்பட்டவர்கள் இரவில் அரை ஸ்பூன் கடுக்காய் பொடியை வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் போதுமானது. நன்றி.வணக்கம்

Photo_1554187088632.png
​இந்த ஒரு ஸ்பூன் போதும் கண்ணாடியை கலட்டி வீசலாம்
20190602_193347.jpg
இந்த மூன்று பொடியை பாலில் கலந்து சாப்பிட்டால் இரத்தம் வேகமாக அதிகரிக்கும்
2019-04-19_11-26-33.jpg
சர்க்கரை நோயா கவலை வேண்டாம்-ஒரு மாதத்தில் இன்சுலின் நிறுத்தி விடலாம் 
2019-04-13_12-01-21.jpg
​ஒரு வாரத்தில் நரம்பு தளர்ச்சி நீங்கி ஆண்மை பெற