Thank you

​உடல் சூடு தணிய,மஞ்சள்காமாலை குணமாக, கல்லீரல் சுத்தம்படுத்த கஷாயம் 

வெயில் காலத்தில் நம் உடலை சூடு பிடிக்காமல் பார்த்து கொள்வது மிகவும் அவசியம். உடல் சூட்டினால் முதலில் பாதிக்கும் உறுப்பு கல்லீரல் தான். இது மனித உடலில் மிக முக்கிய உள் உறுப்பு. இந்த கல்லீரல் கோளாறுகளால் உருவாகும் நோய் தான் மஞ்சள்காமாலை . உடல் சூட்டினாலும், இரவில் கண் விழித்து வேலை பார்ப்பதாலும், தூக்கமின்மையாலும், வெயில் காலத்தில் சரியாக தண்ணீர் குடிகாததாலும் கல்லீரல் பாதிக்கப்பட்டு மஞ்சள்காமாலை நோய் நம்மை தாக்குகின்றது. இதற்கு கீழாநெல்லி மூலிகை சிறந்த மருந்தாக விளங்குகிறது. ஏழைகளின் சத்து கீழாநெல்லியில் புதைந்து இருக்கிறது.எளிமையான முறையில் கஷாயம் செய்முறை 

ஒரு கை பிடி அளவு கீழாநெல்லியை வேருடன் பிடிங்கி ஒரு டம்ளர்(200மி) தண்ணீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். கீழாநெல்லி செடி கிடைக்கவில்லை என்றால் கீழாநெல்லி பொடி நாட்டு மருந்து கடையில் வாங்கி ஒரு ஸ்பூன் எடுத்து கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கண் எரிச்சல், உடல் சூடு, உடல் எரிச்சல் குணமாகும். கல்லீரல் தொடர்பான அணைத்து பிரச்சனைகளும் தீரும். குடியினால் கல்லீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த கஷாயம் ஒரு வரப்பிரசாதம். இதை தொடர்ந்து 3 மாதம் குடித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்,இரத்தம் விருத்தியாகும். சர்க்கரை நோய்,உயர் இரத்த அழுத்தம் குணமாகும். இதற்காகத்தான் சித்தர்கள் இதை ஏழைகளின் சத்து கீழாநெல்லியில் புதைந்து இருக்கின்றது என்றார்கள்.   

Photo_1557208637650.png
​உடல் சூடு தனிய இயற்கை மருத்துவம்
Photo_1554979913210.png
​வெயிலினால் முகத்தில் ஏற்படும் கருமை , கழுத்தில் உள்ள கருமை நீங்க
20190602_193347.jpg
​இந்த மூன்று பொடியை பாலில் கலந்து குடித்தால் இரத்தம் வேகமாக அதிகரிக்கும்
20190530_202812.jpg
​கோடை காலத்தில் ஏற்படும் சளி,இருமல்,காய்ச்சல்,தலை வலி குணமாக