Thank you

​நரை முடி கருமையாக வாரம் இரு நாள் பயன்படுத்தினால் போதும்-இயற்கை ஹேர் டை 

இன்றைய காலத்தில் நீண்ட நாட்கள் இளமையை தக்க வைப்பது கடினமான ஒன்றாகிவிட்டது.ஆண்களையும்,பெண்களையும் பாதிக்கும் பெரும்பிரச்சனை இளம் வயதில் முடி நரைப்பது.இதற்கு சுற்றுச்சூழல்,உணவு பழக்கவழக்கங்கள்,மனஅழுத்தம்,பரம்பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும் முடியை சரியாக பராமரிக்காததும்  ஒரு காரணமாக கருதப்படுகிறது. மேலும் பலரும் நரை முடி மறைய பல்வேறு ஹேர் டைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். அதனால் வெள்ளை முடி தற்காலிகமாக மறையுமே தவிர நிரந்தரமாக மறையாது. அதுமட்டுமின்றி நரை முடி மறைய கண்ட கண்ட பொருட்களை வாங்கி தடவுவதால் பல்வேறு பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன. இதனால் முடியும் அதன் தன்மையை இழந்துவிடுகிறது. எனவே இவற்றையெல்லாம் தவிர்க்க இயற்கை முறையில் நரைமுடி கருப்பாக மாற இயற்கை ஹேர் டை செய்முறை பார்ப்போம்

தேவையான பொருட்கள்

  • நெல்லிக்காய் பொடி 50கிராம்

  • நீலிஅவுரி பொடி 50கிராம்

  • கரிசலாங்கண்ணி போடி 50கிராம்

இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து வைத்து கொண்டு தேவைக்கேற்ப எடுத்து தண்ணீரில் கலந்து வாரம் இரு முறை அல்லது மூன்று முறை தலைக்கு குளிக்கும் போது அரை மணி நேரம் முன் தலையில் ஊற வைத்து குளித்து வந்தால் ஒரு மாதத்தில் நரை முடி இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.நன்றி வணக்கம்

 

   

Photo_1556373129708.png
​ஆண்கள் குதிரை பலம் பெற வயகரா சூப்
20190412_072128.jpg
மருத்துவ குணம் நிறைந்த மூலிகை குளியல் பொடி
2019-04-25_10-31-48.jpg
​ஒரு மாதத்தில் 5 கிலோ எடை குறைய இயற்கை சத்து உருண்டை
Photo_1557208637650.png
 உடல் சூடு குறைய இயற்கை மருத்துவம்,இது சர்க்கரை நோயயும் கட்டுப்படுத்தும்