Thank you

​தைராய்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு, உடல் எடை,வயிறு உப்புசம் வேகமாக குறையும்

                       ஆயிரக்கணக்கான மக்கள் அவஸ்தைபடுவது தைராய்டு பிரச்சனையால் தான். குறிப்பாக இப்பிரச்னையால் பெண்கள் தான் அதிகம் கஷ்டப்படுவார்கள்.எண்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனைகளை தைராய்டு நோய் என்று அழைக்கிறோம். தைராய்டு என்பது தொண்டையின் நடுவே பட்டாம்பூச்சி வடிவத்தில் அமைந்துள்ள ஓர் சுரப்பி. இந்த சுரப்பியில் இருந்து சுரக்கப்படும் ஹார்மோன்கள் தான் உடலின் பல செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த சுரப்பியில் சிறு பிரச்சனை ஏற்பட்டாலும் அது உடலின் மற்ற பாகங்களிலும் பிரச்சனைகளை ஏற்படுத்தும். கழுத்தில் வலி மற்றும் வீக்கம், குரல் கரகரப்பாவது, மூச்சு விடுவதில் சிரமம், விழுங்குவத்தில் சிரமம்,உடல் எடை அதிகரிப்பது போன்றவை தைராய்டின் பிரதான அறிகுறிகள்.மேலும் இருதய துடிப்பு அதிகரிப்பு, உயர் இரத்த அழுத்தம், நரம்பு தளர்ச்சி, அதிக வியர்வை, மாதவிடாய் கோளாறுகள், உடல் சோர்வு போன்றவை தைராய்டின் அறிகுறிகளாகும்.

                        

                       

    

                       தைராய்டு பிரச்சனை சரியாக வேண்டுமென்றால் தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்ய வேண்டும். அதற்கான மருத்துவம் இந்த பதிவில் பார்ப்போம்

தேவையான பொருள்கள்

  • மிளகு 50கிராம்

  • சுக்கு 50கிராம்

  • ​தனியா 50கிராம்

​சுக்கை  தோல் சீவி நன்றாக தட்டி எடுத்து கொள்ள வேண்டும்.பின் மிளகு,சுக்கு,தனியா மூன்றையும் மிக்ஸியில் போட்டு ஒன்றும் இரண்டுமாக அரைக்க வேண்டும். பின் ஒரு டி ஸ்பூன் அளவு பொடி எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். தண்ணீர் பாதியாக வற்றியதும் இறக்கி ஆற வைத்து காலை இரவு உணவுக்கு 30நிமிடம் முன் குடிக்க வேண்டும். 15 நாளில் இருந்தே நல்ல முன்னேற்றத்தை காணலாம். தைராய்டு பிரச்சனைகளால் வரக்கூடிய அணைத்து பிரச்சனைகளும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். இது தைராய்டு பிரச்சனைக்கு மட்டுமில்லாமல் உடல் எடையும் வேகமாக குறைய ஆரம்பிக்கும். வயிறு உப்புசம்,வாய்வு தொந்தரவு, வாய்வு பிடிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு மூன்றே நாளில் தீர்வு கிடைக்கும். குடலை சுத்தம் படுத்தும். உடலில் தேங்கியுள்ள கெட்ட நீர்,காற்று,கொழுப்பை வெளியேற்றும். சளி, இருமல், தொண்டை கரகரப்பு, தலைவலி இந்த மாரி பிரச்சனைகளுக்கு இந்த கஷாயம் நல்ல தீர்வாக இருக்கும்.நன்றி. வணக்கம்

Photo_1554187088632.png
​இந்த ஒரு ஸ்பூன் போதும் கண்ணாடியை கலட்டி வீசலாம்
20190602_193347.jpg
இந்த மூன்று பொடியை பாலில் கலந்து சாப்பிட்டால் இரத்தம் வேகமாக அதிகரிக்கும்
2019-04-19_11-26-33.jpg
சர்க்கரை நோயா கவலை வேண்டாம்-ஒரு மாதத்தில் இன்சுலின் நிறுத்தி விடலாம் 
2019-04-13_12-01-21.jpg
​ஒரு வாரத்தில் நரம்பு தளர்ச்சி நீங்கி ஆண்மை பெற