Thank you

​அனைத்து வித வாத நோய்களுக்கும் அருமையான சுவையான சூப்,மூட்டு வலி,உடலில் எந்த இடத்தில் வலி இருந்தாலும் பறந்து போகும்

​வயதானவர்களை தாக்கும் நோய்களில் ஒன்று மூட்டு வலி.40 வயதை தாண்டிவிட்டாலே பலருக்கும் மூட்டு வலி வந்துவிடுகிறது.இளைஞர்களுக்கு கூட மூட்டு வலியால் பாதிக்கப்படுகிறார்கள்.உடல் எடை கூடுவதே இதற்கு முக்கிய காரணம்.கால்சியம் சத்து குறைபாடு,நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமை,இளம் வயதில் உடல் பயிற்சி இல்லாமை போன்றவை மூட்டு வலி வருவதற்கு முக்கிய காரணம்.உடலை சீராக பராமரிக்கும் வாதம்,பித்தம்,கபம்

என்னும் மூன்று தன்மைகளில் வாதம் எனும் காற்று கெட்டு போனால் கடுமையான வலி,வீக்கம்,அசைவின் போது வலி,காலை மாலை நேரங்களில் அதிகமான வலி,மன அழுத்தத்தால் வலி அதிகமாகுத்தல் போன்றவை நம்மை தாக்கும்.இதுவே ஆர்த்திரிட்டீஸ் எனும் சதை மற்றும் எலும்பு வலிகளுக்கு காரணமாகி கை கால் வலி,கழுத்து வலி,இடுப்பு வலி போன்றவற்றால் அவதிபடுகின்றனர்.இவர்களுக்கு இயற்கையான முறையில் சூப் செய்முறையை பார்ப்போம்.

தேவையான பொருள்கள் 

  முடக்கற்றான் பொடி 50கி

  வாதநாராயண பொடி 50கி இவை இரண்டும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்

   ஒரு தக்காளி

   ஒரு வெங்காயம்

   1 tsp சீரகம்

   1 tsp மிளகு

   பூண்டு 7 பற்கள்

முதலில் தக்காளி,வெங்காயம்,சீரகம்,மிளகு,பூண்டு இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து வைத்து கொண்டு.பின்னர் 300மில்லி தண்ணீரில் அரை ஸ்பூன் முடக்கற்றான் பொடி,அரை ஸ்பூன் வாதநாராயண பொடி கலந்து இதனுடன் அரைத்து வைத்ததை கலந்து அடுப்பில் வைத்து 10நிமிடம் கொதிக்க வைத்து அது 150மில்லி ஆக வற்றியதும் இறக்கி ஆற வைத்த பின் வடிகட்டி காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.வாரம் 

இரண்டு முறை குடித்தல் போதும்.15 வயதுக்கு உட்பட்டவர்கள் இதை 50மில்லி குடித்தால் போதும்.இதை தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால் உடலில் உள்ள நரம்புகள் வலுப்பெறும்,மூட்டு வலி,கை கால் வலி,இடுப்பு வலி,கழுத்து வலி குணமாகும்,உடலில் உள்ள வீக்கம் வற்றி போகும்,உடலில் எந்த இடத்தில் வலி இருந்தாலும் பறந்து போகும்.உடல் சோர்வு நீங்கிம்.அனைத்து வித வாத நோய்களுக்கும் இது ஒரு அருமையான சுவையான சூப்

செய்முறை

watch it on youtube

                                     

  

​உடல் எடை வேகமாக குறைய இதை சாப்பிடுங்க

​உடலை இரும்பாக்கும் மூலிகை சத்து உருண்டை

2019-04-16_19-26-26.jpg