Thank you

​ஒரு மாதத்தில் 5 கிலோ உடல் எடை குறைய மூலிகை உருண்டை

​இன்று பலரும் சந்திக்கும் பிரச்சனையாக உடல் பருமன் இருந்து வருகிறது.இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம் நாம் கடைபிடிக்கும் உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைதான்.எண்ணையில் பொறித்த உணவுகளை அதிகம் உண்பது,சோம்பலான வாழ்க்கை முறை,உடல் பயிற்சி மற்றும் உடல் உழைப்பு இல்லாதது,தைராய்டு போன்ற காரணங்கள் உடல் எடை அதிகரிக்கும்.பக்கவிளைவுகள் ஏற்படுத்தக்கூடிய மாத்திரைகள்,ஸ்டராய்டு மாத்திரைகள்,ஹார்மோன் மாத்திரைகள்,இன்சுலின் போன்றவை உடல் எடையை அதிகரிக்கும்.சில பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு உடல் எடை கூடி கொன்டே போகும்.சிலர் டயட் என்ற பெயரில் உடலை கெடுத்து கொள்கின்றனர்.காலை உணவை தவிர்த்தால் உடல் எடை கூடி கொண்டு தான் போகும்.என்ன பிரச்னையினால் உடல் எடை கூடினாலும் இந்த சத்து உருண்டை நல்ல பலன் அளிக்கும்.

தேவையான பொருள்கள்

    கொள்ளு 200கி

    ஒலிவ் விதை 100கி

    சதாவரி பொடி 50கி

    வெல்லம் 350கி

இதில் கொள்ளும்,ஆலிவ் விதையும் உடல் எடையை குறைக்க உதவும்.சிலருக்கு உடல் எடை குறையும் போது தோல் சுருக்கம் ஏற்படும்.சதாவரி பொடி உடலுக்கு தேவையான சத்தும் தோல் சுருக்கம் வராமலும் தடுக்கும்.முதலில் கொள்ளையும்,ஒலிவ் விதையையும் தனித்தனியாக வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.பின் இவை இரண்டையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து இதனுடன் 350கி வெல்லம் சேர்த்து மறுபடியும் நன்றாக அரைக்க வேண்டும்.இதை ஒரு பாத்திரத்தில் போட்டு இதனுடன் சதாவரி பொடி சேர்த்து கலந்து எலுமிச்சை பழம் அளவிற்கு உருண்டை பிடிக்கவும்.உருண்டை பிடிக்கும் போது தேவைக்கேற்ற நெய் சேர்த்து கொள்ளலாம்.இதை ஒரு டப்பாவில் போட்டு வைத்து கொள்ளலாம்.காலை மாலை இரண்டு உருண்டை வீதம் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.ஒரு மாதத்தில் 5 கிலோ எடை குறையலாம்

செய்முறை